"ஒரு கம்பியின் வலி"-ஹைக்கூ கவிதைகள்.

வீணையின் அதிர்வில்
ஒளிந்திருக்கிறது
ஒரு கம்பியின் வலி.
************************************
மின்னல்....
எழுதப் படாத ஒரு கவிதை...
உனது பார்வையைப் போல.
******************************************
நகர்ந்து செல்லும் இரயிலிலிருந்து...
ஏறியும்..குதித்தும் கொண்டிருக்கின்றன
மனங்கள்.
******************************************************
ஓடையில் குளிக்கும் நாணல்கள்...
வளைந்து ...வளைந்து செல்கிறது
ஊர்க்கதைகள்.
*******************************************************
குளத்தில் தெரிகிறது இரயிலின் நிழல்...
நீந்தும் மீன் நினைத்துக் கொள்கிறது...
தான் இரயிலில் பயணம் செய்வதாய்.
**********************************************************

எழுதியவர் : rameshalam (4-May-12, 9:33 pm)
சேர்த்தது : rameshalam
பார்வை : 184

மேலே