காதல்

நரகம் சொர்கம்
நயமாய்க் கலந்து
நடுவில் கொஞ்சம்
நஞ்சையும் சேர்த்து
அமிலம் அமிர்தம்
அதனுடன் குழைத்து
கரும்பு கொண்டு
கலக்கி வடித்தால்
கவர்ச்சியாய் ஒரு கரைசல்
அவனியில் அதன் பெயர் காதல்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (19-May-12, 5:38 pm)
Tanglish : kaadhal
பார்வை : 240

மேலே