இலட்சிய தோணி
உறுமும் அலைகள்,
சிதைவு செய்யும் சுற்றுபுறங்கள்,
பனியின் சிலிர்ப்பூட்டும்
பாசாங்கு வார்த்தைகள்,
வேஷம் கட்டும்
ஆசைகள்...
இடை..இடையே கண்சிமிட்டும்
நட்சத்திரங்களாய் மிதக்கும் கனவுகள்...
வலைக்குள் சிக்கிய மீனாய்
நர்த்தனம் செய்யும் நடப்பு நிகழ்ச்சிகள்
உறக்கம் தொழிந்த உடைந்த இரவுகள்...
இந்த கடலில்தான் என் இலட்சிய தோணி...
என் உறுதியில் ..
உறுதி இருந்ததால்..
ஒருநாள் கரை தெரியும்...!