நீ எங்கே?

பாசம் கொட்டி வளத்த புள்ள பட்டணம் தான் போயிருச்சு
பரிவாய்ப் பேசுவதும் படிப்படியா கொறஞ்சு போச்சு
வருஷம் பல ஆக ஆக வருகை எல்லாம் நின்னு போச்சு
இருந்தும் உந்தன் நெனப்பு மட்டும் இருதயத்தில் இறங்கிப் போச்சு
ஒத்த மழை பெய்வதற்குள் ஓடி வந்தேன் குடையைத் தூக்கி
இங்கு நீ இல்லை என்பது வழக்கம் போல மறந்து போச்சு..

எழுதியவர் : RajeeSankar (25-May-12, 3:09 pm)
சேர்த்தது : RajeeSankar
பார்வை : 259

மேலே