சுமி அக்காவுக்கு திருமண வாழ்த்து ....(வாழ்த்துங்கள் நண்பர்களே )

திருமண வாழ்த்து
நாள் = 27 -05 -2012


மூவுலக மூர்த்திகளும்
முகமலர அருள்பொழிய !

வானுலக தேவர்களும்
வந்தமர்ந்து வாழ்த்துபாட !

ஆன்றோரும் சான்றோரும்
ஆசிமழை தூவி வாழ்த்த !

ஈன்றோர்கள் இன்முகத்தில்
ஈடில்லா மகிழ்ச்சிபொங்க

இனியதோர் மணவாழ்வில்
இணையும் இரு நெஞ்சங்கள் .


மணமகன்
(சி)ங்கத்தின் சீரும் சிறப்பொடு
(வ)ரிப்புலியின் வற்றா வலிமையோடு
(கு)ன்றளாவும் கொடை ஈந்த வள்ளலாக
(மார்)பில் தன் மனையாளை தாங்கி நிற்பான் !

மணமகள்
(சு)ழலும் புவிமகளின் பொறுமையோடு
(ம)ழைதரும் மேகத்தின் கருணையோடு
(தி)த்திக்கும் தமிழமுதின் இனிமையோடு
(தேவி) தன் மன்னவனை மனதில் வைப்பாள் !

வாழ்த்து தூவ வரிகள் தேடி
வானம் வரை கால்பதித்தேன் .
வரிகள் எல்லாம் - உங்கள்
வரவை எண்ணி - மணவாசலிலே
வருகை பதிவில் உண்டாம் !

மனமொத்து வாழும் - திரு
மணவாழ்வில் நீவிர்
மகிழ்ச்சி கொண்டு நிலைத்துவாழ - என்
இதயத்தின் ஒலிகொண்டு வரிகள்தந்து
இனிதாக வாழவே வாழ்த்துகிறேன் !

தட்டிக்கொடுத்தும் இருவரும்
விட்டுக்கொடுத்தும் - ஊடலும்
கூடலும் கலந்த இல்வாழ்வில்
காதல்மட்டும் தேடத் தேட
திகட்டா பாடலாகப் பல்கிப்பெருக !

பதினாறு வளமும்பெற்று
பண்பாய்ப் பிள்ளைபேறும் பெற்று
தர்மத்தின் வழிநின்று
நோய்நொடி தொலைந்து
நிதி நதியாய் பெருக !

தமிழன்னை அருள் கொண்டு
தமிழ் போல தரணி நின்று - நல்
தம்பதி சகிதமாய்
நீங்கப்புகழ் கொடையுடனே
பாங்காய் வாழ வாழ்த்துகிறேன் !

இல்வாழ்வு என்றும் இனிதாய் அமைய எழுத்து நண்பர்களோடு வாழ்த்துகிறேன் ......

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா ..... (28-May-12, 12:07 pm)
பார்வை : 2535

மேலே