என் கண்ணீரின் ஆறுதல் 555
அன்பே.....
நான் எனக்காக அழுத
நேரத்தைவிட...
உனக்காக அழுத நேரத்தில்தான்
நான் உன்னிடம் சரணடைந்தேன்...
உனக்காக அழுத நேரத்தில்
என் கண்ணீர் மட்டும் சிரித்தது அன்று...
என்னுடன் அழுகிறது
என் கண்ணீர்த்துளிகளும் இன்று...
என்னுடன் நீ இல்லாததால்...
ஆறுதல் சொல்கிறது என் கண்ணீர்
இன்று எனக்கு...
அவள் இல்லை என்றாலும்
நான் உன்னுடன் என்றும் இருப்பேன் என்று.....