ஒப்பில்லா உழவு (கவிதா திருவிழா )
ஒப்பில்லா உழவு
இப்பூலோகத்தின் சுவாசம்
உழவு இல்லையேல்
உலக நாகரிகம் மண்ணுக்குள் புதைந்திருக்கும்
வானவீதியில் தேரோட்டுபவனுக்கும்
வறண்டபூமியில் காரோட்டுபவனுக்கும்
பணமெத்தையில் தூங்குபவனுக்கும்
பட்டம் பலபெற்று
பாருக்கே வேந்தன் என்று
பல்லவிப்பாடும் ஓநாய்களுக்கும்
அதிகார போதையில் ஆணுவமாய்
அந்தரத்தில் பரப்பவனுக்கும்
அரையாடை மகானான
உழவன் புனித பூமியில்
ஏர் உழுதால்தான் தான்
உறங்கும் முன்னும்
உறங்கியப்பின்னும் உன்னத
உணவை உண்டு உயிர் வாழ்வோம்,
பாவம் அந்த உழவன்
உழும் போதும்,உற்சாகமாய்
பாசப் பயிர்களுடன்
உறவாடும்போதும் கோடைக்கு
குலு குலு ஏசியும்
குளிர்பான கோக்கக்கோலாவும்
குளிருக்கு கோட்டு சர்ட்டும்
கோப்பையில் மதுபானமுமா கேட்கின்றான்.
இல்ல பத்தடுக்கு மாளிகையும்
பஞ்சு மெத்தையும் இருந்தால் தான்
உறங்க போவேன் என்கின்றானா?
ஐயகோ! கொடுமையிலும் கொடுமை,
பாவத்திலும் பாவம்
பத்து பைசா கடன் இல்லாம
கை குழைந்தைக்கு பசியாற உணவு,
பொண்டாட்டி தாலி அடகுவைக்காம
அழகான நல்கல்வி தன் குழந்தைக்கு,
அவன் வயிறுக்கு
கூழோ கஞ்சியோ
பசியோ பட்டனியோ
அதுப்பற்றி ஒருபோதும் யோசிக்கமாட்டான்.
அன்னாந்து பார்த்து ஏர் உழுது
அவசர அவசரமாய் விதை விதைத்து
இரவு பகலாய்
பாம்பு பல்லி என்று பாராமல்
பக்குவமாய் பராமரித்து
அவசர அவசரமாய் அறுவடை செய்தால்
அடிமட்ட விலைகேட்க்கும்
தரகர்களின் கையை பார்க்கும்
உழவனின் கடைக்கண் பார்வையிலே
வற்றிப்போன கண்ணீரின்
ஏக்கமன்றோ? மிஞ்சும்.......
பாவப்பட்ட ஜென்மமாய்
கடன் காரங்களுக்கு ஒண்டி ஒண்டி
வாழ்க்கை வாழும்
அந்த கணம் அவன்
அடிவயிறு எரியாதோ ?
மானக்கேட்ட அரசியல் வாதிகளும்
மனித நேயமற்ற கொள்ளையர்களும்
கேடுகெட்ட சொகுசு வாழ்க்கை வாழ
உழவனின் உழைப்பையா உறிஞ்சி
ஒட்டுண்ணி போல்
ஈனங்கெட்ட வாழ்க்கை வாழனும்
ஒப்பில்லா உழவு தொழிலுக்கு
அந்தி மாலை சூரியனும்
அர்த்த ராத்திரி சந்திரனும்
பாசமழை பொழிந்தாலும்
பாவி மனங்கொண்ட பல பட்டதாரிகளும்
பரிதாபமே இல்லாமல்
பஞ்சத்தில் வாழும் விவசாயி இடமே
பத்துரூபா வேண்டாம்
பல ஆயிரம் தான் பிச்சைவேண்டும் என்று
ஊழலுக்காய் ஒரு மாதம்
ஒரு கையெழுத்துக்கு அலையவிடும்
அசிங்கத்தை என்னவென்று சொல்வதப்பா?
ஆம் ஆயிரமாயிரம் அறிவியலும்
அழகு கணினியும்
அசுரத்தனமாய் வேலை செய்தாலும்
ஒப்பில்லா உழவு தொழில் ஈடுபடும்
உழவாளிக்கு ஈடாகதுப்பா?
ஒப்பில்லா உழவாளிதான்
உலகத்தின் உயிர், மூச்சி எல்லாமே.
உழவாளி தழைக்காமல்
உலகம் தழைக்காது
ஒ ! உலகமே உழவாளியை வணங்கு
அவன் சிரித்தால்
உலகமே சிரிக்கும்!
அவனை பார்த்து நீ சிரித்தால்
நீ சீரழிந்து போவாய்!!
உலகமே இது நிஜத்திலும் நிஜம்!!!
இது என் கட்டளை கட்டளை!!!!!
.