என் தேவையாக நீயே......

எனக்கு வயிறு பசிப்பது
எனக்கே தெரியாது.....

எனது ஆடை கிழிந்து போனதை
நானே கவனித்திருக்க மாட்டேன்

எனது பாக்கெட்டில் பணம்
இல்லாதது என் நினைவில் இருக்காது

என் எல்லா தேவையையும்
நீயே கவனித்து
என் தேவையாக நீயே
இருக்கும் போது


நான் ஏன் என்னை பற்றி
சிந்திக்கப் போகிறேன்?

எழுதியவர் : சாந்தி (8-Jun-12, 11:42 pm)
பார்வை : 172

மேலே