அன்புள்ள அப்பா மன்னிப்பாயா ?

அன்புள்ள அப்பா ...!

உயிர் கொடுத்தாய் எனக்கு ...
என்ன கொடுத்தேன் நான் உனக்கு...?

ஈரைந்து மாதம் என் தாய் சுமந்தாள்..பின்
பருவம்வரை பத்திரமாய் சுமந்தவன் நீதானே ..!

திரியாய் எரிந்தது நீ ..
நம் வீட்டில் வெளிச்சம் ..!?

நெஞ்சுக்குள் அன்பை சுமந்து ...
நிதமும் நம் குடும்பத்தை சுமந்து ...
நீ சுமைதாங்கியே ஆனாய் ..
சுகமாய் அதையும் அனுபவித்து கொண்டே ..!?

நீ எங்கள் கதாநாயகன் ...!
நடுத்தர குடும்பத்தில் ...
கதாநாயகன் கனவுகள் மட்டுமே வானவில்லாய்..
வாழ்க்கை பயணம் ...
வரவு செலவு கணக்கிலே கரைந்துவிடும் ...!?

கல்விக்காக கண்களில் கண்டிப்பு ..
தவறிளைக்கும்போது போது தண்டித்து ..
வார்ப்படமாய் எங்களை வார்த்தாய்...
தூங்கும்போது எத்தனைதடவை ..
எங்கள் தலைகோதி கண்ணீரும் வார்த்தாய் ..!?

எங்களுக்கு ஏணி நீதான் ...அதில்
ஏற்றிவிட்டவனும் நீதான் ..
முதுமையில் நீ தடுமாறுகிறாய் ...
இளமையில் உன்கை பற்றி
நடை பயின்ற நாங்கள் ...இன்று
நாகரீக மோகத்தில் நரகத்தில் வாழ்கிறோம் ..
சொர்கத்தை தொலைத்துவிட்டு ....?!

என் குழந்தைகளுக்கு....
நானும் உயிர் கொடுத்தேன் ...
உன் உயிர் மருகுவதை மறந்து ...!?

வசதியும் ...வருமானமும் ..
கனக்கிறது அப்பா எனக்கு ...

என்னை சுமந்த உன்னை ..
முதுமையில் சுமக்காமல்
என் சுமைகளை மட்டும் ...
சுமக்கும் சுயநல மனிதனாய் ...!?

நீ மன்னிப்பாய் என தெரியும் ...
என் மகன் என்னை மன்னிப்பானா !?

எழுதியவர் : இரா.அருண்குமார் O +ve (17-Jun-12, 10:10 am)
பார்வை : 242

மேலே