சுவரொட்டி
அரசியல்வாதிகள் சுவரொட்டிகள் சுவரெங்கும்.
பேசவைத்து கேட்போமா..?!
மின்னலாய் ஒரு எண்ணம்...
உணர்வு அளித்து ஒளிந்து நின்றோம்.
துப்பபட்டது உமிழ்நீர்...
லிட்டர் லிட்டராய் அளந்து, ஓய்ந்து போனது.
வீசப்பட்டன வசவுகள்...
அகராதியில் அர்த்தம் தேடி தோற்று போனது.
படித்து கிழிப்பது தெரியும்...
"பார்த்ததும் கிழிப்பது.." புதிய தத்துவம் தெரிந்து கொண்டது.
அரசியில் ஒரு சாக்கடை...
ஏராளமானோர் ஏன் ஏசுகிறார்கள்? உண்மை புரிந்து கொண்டது.
திருந்த பாருங்கள் இல்லை
எங்களை தடை செய்யுங்கள்...
சுவரொட்டிகள் புலம்பியது நமக்கு கேட்காமல் இல்லை.