உன்னை அலங்கரிக்க

ஒரு சொட்டு நிலவெடுத்து

உன் நெற்றி பொட்டாய் வைத்து

விண்மீனை உடைத்து வந்து

காது அணிகலனாய் மாற்றி

சந்தன சாறெடுத்து முகத்தில் பூசி விட்டு

குங்கும பொட்டிற்கு என் குருதியை

திலகமாய் நானிடுவேன்

எழுதியவர் : ருத்ரன் (25-Jun-12, 12:32 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : unnai alankarikka
பார்வை : 188

மேலே