நட்பே மறக்காதே
நட்பின் பாசமெல்லாம் அளக்க முடியாது
அளக்க நி நினைத்தால் இந்த உலகம் போதாது
தொப்புள்கொடி பந்தமெல்லாம்
தொடர்ந்து வருவதில்லை
தோள்சாயும், நட்பு மட்டும் என்றும் பிரிவதில்லை
ஏதோ ஒரு இடத்தில உனக்கு நட்பு வரும்
நட்பு இல்லையென்றால் அந்த காற்றும் கறுத்துவிடும்
கவிதைக்காக சொல்லவில்லை நிஜமாய்
உணர்ந்ததால் சொல்லுகிறேன்
நட்பை மறவாதே நட்பு உன்னை மறக்காதே