அவளின் கோரிக்கை உண்மையா

அந்தி மயங்காத வேளை
அலுவலகத்தில் இருந்து
முந்தி வந்த கணவன்
காரணம் கேட்ட மனைவி

அவன் கொடுத்த பூ
தொடுத்த காதல் கணை
தொடர்ந்த காதல் யுத்தம்

சின்னதாய் புன்னகையோடு
அடுத்த நாள்
அலுவலகம் கிளம்பியவனிடம்
செல்லமாய் அவள் சொன்னாள்
மீண்டும் இதுபோலெல்லாம்
முந்தி வரக் கூடாது.

எழுதியவர் : அலாவுதீன் (30-Jun-12, 7:45 am)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 164

மேலே