முதல் முத்தம்
இன்று தான் பார்த்தது போல இருக்கிறது,
கடந்ததோ மூன்று வருடங்கள்,
அவள் பார்வையில் தாய் பாசத்தை கண்டேன் முதன்முதலில்,
என் விழி தீண்டியதும் அவள் விழி திணறியது,
கனமாய் இருந்த என் மனதை இறகாய் மாற்றினாள்,
கனமாய் இருந்த அவள் தேகம் இறகாய் மாறியதை
அறிந்தேன் என் கை தீண்டலில்,
அவள் அனுமதியுடன் என் முதல் முத்தத்தை பதித்தேன்,
உணர்ந்தேன் அந்த நொடியில் நானே அவள் உலகம் என்று, கண்ணில் நீருடன் என்னை பார்த்தால் மாமா என்றாள், என்னை விட்டு தனியே செல்லாதே என்றாள், சென்றேன் என் வாழ்வில் முன்னேறி அவள் தந்தையின் மதியுடன் திருமணம் நடக்க வேண்டும் என்று,
ஏனோ தவிக்கிறேன், அவள் கண்களின் தீண்டல் கிடைக்குமோ என்று, என் வாழ்வில் முன்னேறும் வழியும் கிடைக்கவில்லை,
நன் மீண்டும் மீண்டும் தவிக்க விடுகிறேன் அவளை, பெற்றோரின் சம்மதிதிற்கு,
முன்னேற்றம் அடைந்தே காதலி, உன் கண்களில் தடைகள் தெரியாது,
காதலியின் கரத்தை பிடித்து முன்னேறு தடைகளும் மறைந்துவிடும் அவள் புன்னகையில்.