தமிழ்
சாய்வு நாற்காலியில்
சாய்ந்த வண்ணம்
சம்போ சிவ சம்போ- என்று
சாவை நோக்கி காத்திருக்கின்றது
நம் இனிய தமிழ்
காப்பாற்றுவோம் தமிழை!!
தலையில கட்டுவது ரிப்பனா
வெள்ளைகாரன் தான் உன் கொப்பனா !!
என்று பாடி தமிழ் தமிழ் என்றே உயிர் மாய்த்த
பாரதிதாசனை ஒரு கணம் நினை கூறுவோம்
கைகட்டி மெய்கட்டி சிறைவாசம் கண்டோம்
மதிகெட்டு மானம்கெட்டு வெள்ளையன்
மொழிமேல் ஏனிந்த மோகம் கொண்டோம் !!
அவன் சுதந்திரம் தந்தாலும்
நாம் பெறுவதாயில்லை இன்னும்
ஆங்கிலஆசைக்குள் அடிமைபட்டு இருக்கின்றோம்!!!
இனியேனும்!
தமிழ் மறவாதிருப்பபோம்
மழலைக்கும் தமிழறிவு தருவோம்
தத்தம் தலைமுறையை தமிழூட்டி வளர்ப்போம்!!
வாழ்க தமிழ் வளர்க செந்தமிழ் தேசம்!!!
--------------------சுதாகண்ணன்-------------------------------------------------