காதல்.....நினைவுக் குறிப்புகள்.

உனது
மௌனத்தைத்தான்
மொழி பெயர்த்தேன்.
அதுதான்
இந்தக் கவிதையாகி
இருக்கிறது.
***************************************
என்னைப் பார்க்கையில்--
உனது இமைகள்
உதடுகளாகி
முத்தமிட்டுக் கொள்கின்றன.
உனது உதடுகள்
இமைகளாகி
மூடிக் கொள்கின்றன.

தெரியாத வேலையைச்
செய்வதென்பது...
காதலில்தான்
ஆரம்பிக்கும் போலும்.
*****************************************
நான் வருவதைப்
பார்க்க விரும்பாதவள்
இருக்கிறாய் நீ.
என்றாலும்....
என் காலடி ஓசை
கேட்கும் போதெல்லாம்..

உனது தோடுகள்
எப்படியோ..
90 டிகிரிகள்
திரும்பி விடுகின்றன.
*****************************************
காதல்
யாசகம் இல்லை.
கர்வம்.
யாசிக்கப் படும்
காதலின் தட்டுகளில்..

சில்லறைகள் மட்டுமே
விழுகின்றன.
*******************************************

எழுதியவர் : rameshalam (20-Jul-12, 11:36 am)
சேர்த்தது : rameshalam
பார்வை : 192

மேலே