துணிந்து செய்
துணிந்து செய் எதையும் துணிந்து செய்
இதயம் சொல்லும் எதையும் உடனே
துணிந்து செய்
உலகம் உன் சொல் கேட்க
ஊரே உன் புகழ் பாட
துணிந்து செய் இன்றே
துணிந்து செய்
எதுவும் இங்கு நிரந்தரமில்லை
எல்லாம் அறிந்தவர் யாருமிங்கில்லை
உனக்கெது வேண்டும் முடிவெடு
தயக்கம் அதற்கு விடைகொடு
துணிந்து செய் உடனே
துணிந்து செய்.
வருவது எதுவும் வரட்டும்
வானம் உன் வசம் உண்டு
துணிந்து செய் உடனே
துணிந்து செய்.
விதியை என்றும் நம்பி விடாமல்
வினையை முடிப்பவர் வெல்வார்
உன்னிடம் உண்டு மனத்திடம்
அதுவே உந்தன் வழித்தடம்
துணிந்து செய் உடனே
துணிந்து செய்.
கவிஞர்
மு.பாலசுப்ரமணி