அழகாய் பூத்ததே, நட்பாய் மலர்ந்ததே....

என் அனைத்து எழுத்துலக தோழர் தோழிகளுக்கு நட்பு நாள் வாழ்த்துக்கள்..

ரத்தவழி பந்தமும்மில்லை
உறவில் பூத்த கொடிமுல்லை
இங்கே நானும் எங்கோ நீயும்
கணினி இணைப்பில் நட்பாயினைந்தே
அறிமுகம்கண்டு கருத்து பரிமாறி
தோழமையான உந்தன் வரிகள்
வீசிடும் தென்றலாய் தவழ்ந்திடும்போது
மறந்து போனது கவலைகள்
நினைவில் நின்றது சிரிப்பலைகள்
நட்புப்நாளில் மட்டுமா உன்கவி
கேட்டுவிட நீ விழையும் முன்னே
சொல்கிறேன் நட்பு என்றும் உண்டு
இதை கொண்டாடும் தினம்தான் இன்று!

எழுதியவர் : ஆயிஷா பாரூக் (5-Aug-12, 2:30 pm)
பார்வை : 472

மேலே