திட்டும் மனிதர்களைத் தேடு !

திட்டும் மனிதர்களைத் தேடு !
நாவலோ கவிதையோ
பாராட்டுபவர்களைத்
தெரிந்துகொள் ! நன்றி சொல் !

திட்டுபவர்களைப் புரிந்துகொள்
பளிச்செனத் தெரியும்
வெள்ளை உடையில்
ஆங்காங்கு தென்படும்
அழுக்குக் கறைகள் போலவே
தென்படும் தவறுகளைச்
சுட்டிக்காட்டுபவர்களுக்கு
நன்றியோடு நிற்காதே !
இன்னும் ஒரு
புதுப்படைப்பை
திட்டியவர்களே பாராட்ட
படைத்துக்காட்டு !

பாராட்டைத்தான் விரும்புவார்கள்
பலரும் !
மாற்றி யோசி !
சிலையெனவே உருவாகும்
உனது இலக்கியச்
சிற்பங்களை மறைக்கும்
கற்களை அகற்ற
கண்டனங்களே உதவும் !
பாராட்டுக்கள் அல்ல !

எழுதியவர் : வா. நேரு (6-Aug-12, 3:32 pm)
பார்வை : 317

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே