சிரிப்பு துளிகள் !

இதழ் சஞ்சிகையின்
இலவச இணைப்பு
சிரிப்பு...!
_______________
இதயத்தில் கருவுற்று
இதழ்களில் பிரசவிக்கும் குழந்தை
சிரிப்பு...!
_______________
தூரிகை இன்றி
உதடுகள் வரையும் ஓவியம்
சிரிப்பு...!
_______________
ஊமைகள் பேசும்
மௌன மொழி
சிரிப்பு...!
_______________
முகத்தாளில் இதழ்
கிறுக்கும் ஹைக்கூ கவிதை
சிரிப்பு !
_______________
முக வானில்
மின்னல் கீற்று
சிரிப்பு !
_______________
இதழ் வீணையில்
மோகன ராகம்
சிரிப்பு !
_______________
வாடிய செடியில்
வாடா மலர்கள் – முதுமையில்
சிரிப்பு !

எழுதியவர் : கே.எஸ்.கலை (6-Aug-12, 9:15 pm)
பார்வை : 223

மேலே