ஆகஸ்து பராசக்தி

ஆகஸ்டு 8 1975
என் வீட்டில் ஹிரோஷிமா!
இளம் அப்பாவை
விதி குண்டு விழுங்கியது
இளம் தளிர் பருவம்
புரியாமல் விழித்ததோம்
அழும் அம்மாவின் சேலை தலைப்பில்
ஒளிந்தோம்;
துக்கம் கேட்பரை கண்டு பயந்தோம்!
நீயே கதி என்று சரண் அடைந்தோம்

பூ போன்ற அம்மா
பூவிலிருந்த புலி
நிஜவாழ்க்கை செயலி
அன்பை சுரந்தாள்
சிரிப்பை மறந்தாள்
தூக்கம் தொலைத்தாள்
எம் துக்கம் துடைத்தாள்
கழுகு பார்வை தவிர்த்தாள்
பராசக்தியாய் காக்க எழுந்தாள்
தலை நிமின்று நின்றாள்

வெறும் காட்டன் சேலை தலைப்பு
இருப்பு கவசமாய் மாறிய மலைப்பு
திரை பின்னே எம் பாதுகாப்பு

அம்மா அப்பாவாக
தன் பிழை தெரிந்த கடவுள் காவலாக
நல் மனிதர் பலர் கூடி நிற்க
ஊர் கூடி தேர் இழுத்தது!

என் முகம் மறந்த அப்பாவை நினைத்தால்
அம்மாவின் முகமே பளிரென்று
உற்று பார்த்தால் ஊர் கடவுள் முகம்!

காலம் பல கடந்தோம்
பின்னோக்கி நடந்தோம்
கல்லும்,முள்ளும், சுடு சொல்லும்
சோகம், சுகம், ஒரு நியாபக கதம்பம்
ஆபீசிக்கு நேரம் ஆகிறது!!
இனி எல்லாம் சுகமே!

எழுதியவர் : வியாசன் (10-Aug-12, 11:52 pm)
சேர்த்தது : vyasan
பார்வை : 132

மேலே