மது விலக்கு

மது!
நல்ல நட்பினை விட்டு விலக்குது
தப்பு நட்பினை தேடிக்கொடுக்குது
உயர்ந்த மனிதரின் மதிப்பை குறைக்குது
உழைக்கும் மனிதனின் ஊதியம் கரைக்குது!

விடலை பருவத்தை எட்டும் சிறுவனில்
விஸ்கி வாசனை வாயில் வீசுது
பள்ளி பருவத்தில் பழகும் பழக்கமாய்
மதுவின் புழக்கமோ மலிந்து போனது!

கல்யாணவீடு காதுகுத்துவீடு ஏன் கருமாரிவீடென
விஷேசம் வந்திட்டால் மது விஷ்வரூபமாய் மாற
வீதியில் வாந்தி சீர்குலைந்த ஆடை
தரம்குறைந்த வார்த்தை தள்ளாடும் நடை
மறுநாள் காலையில் மாப்பிள்ளை கோலத்தில் அம்மனிதன்!

மது நாட்டிற்கும் வீட்டிற்கும் உயிருக்கும் கேடு
மற்றவர் அறியாதபடி மது குப்பியில் மறைந்திருக்கும் உபதேசம்!
தரத்திற்கேற்ப தங்கநிற மது அருந்தும் மாமனிதன் ஒரு புறம்!
தாரத்தின் தாலியின் அடகால் தடப்புரழும் பாமரன் ஒரு புறம்!
ஏற்றதாழ்வு பார்க்காத போதை!
ஏழை மனைவியின் இருதயம் நிரப்பும் கண்ணீர்!

மது உற்ப்பத்தியின் சேவை கடும் குளிர் பிரதேசத்திற்கு தேவை
காஷ்மீர் வாசிகள் தேவைக்கு பருகலாம்
குளுமணாலி குடிமகன் கொஞ்சம் பருகலாம்
தமிழ் நாட்டு சூட்டிற்கு இளநீர் தேவலம்!
நடப்பு நிலமையோ தலைகீழாய்!

ஏர்பிடிக்கும் கையில் பீர் பிடிக்கும் ஏழை
இராணுவ மதுவென்றால் அமோக வரவேற்பு
எங்கு செல்லுது தேசம் எப்படி மலிந்தது போதை!

நரம்பு தளர்ச்சியோ இரும்பு மனிதனுக்கு
சிறுநீரக கோளாறு சீறும் இளைஞனுக்கு
நுரையீரல் பாதிப்பு என நூதன பெயரில்
மதுவினால் வருகுது நோய்கள் பற்பல
மது எமன் வழி கூட்டி செல்லும் பாதை
எடுத்து சொன்னால் மூடுவார் காதை!!

அறிவிழந்த அரசாங்கம்!!

உயர் ! கல்வி துறையை தனியாருக்கு வித்து-மது
உயிர் கொல்லி துறையோஅரசாங்க சொத்து!
யாரிடம் கேட்பது நியதி-மதுவை
தடுத்திடும் தலைமையோ தடுக்கிடும் நிலையில்
சமுதாயம் சீர்பட சீறுவோம்
சாக்கடை மதுவை விலக்கு வோம்!

போர்களம் ஒன்று செய்வோம்
மது புழக்கத்தை விரட்டி வெல்வோம்
இளைஞர்கள் சபதம் கொள்வோம்
இனி உயிர் கொல்லி மதுவை தீண்டோம்!
தந்தையர் திருந்திட வேண்டும்
தன் தலைமுறை நலம்தனை எண்ணி !

மதுவின் தீமைகள் கூடிய
புத்தகம் பள்ளியில் சேர்ப்போம்!
மாணவர் அடைந்திட்ட பயனை
மற்றவர் அறிந்திட செய்வோம்!

யாரும் அருந்திடா மதுவை
யார்தான் விற்றிட முடியும்!
பருகிடும் மனிதர்கள் இல்லேல்
பாவம் மதுவே விலகி கொள்ளும்!

இனி
எங்கும் மதுவாசம் விலகி
அமைதியின் வாசனை வீசட்டும்!!

எழுதியவர் : சுதாகண்ணன் (12-Aug-12, 8:11 pm)
பார்வை : 2399

மேலே