சுதந்திரம்

சுதந்திர தினமாம்
எங்கே சுதந்திரம்!
யாருக்கு சுதந்திரம் !
அன்று
நம் ஒற்றுமையின் வலிமையை
கண்டு பயந்து
ஓடிய வெள்ளைக்கார கூட்டத்திற்கு .....
இன்று
எளியவர்க்கு அல்ல வலியவர்க்கு
பசித்தவர்க்கு அல்ல புசிதவர்க்கு..
நல்லவர்க்கு அல்ல கெட்டவர்க்கு
மக்களுக்கு அல்ல ஆள்பவர்க்கு
-மேகநாதன்