தொட்டுவிடும் தூரம்தான்

நட்சத்திரங்கள் சேர்ந்து
சூரியனை தேடும் நாடகம் இது..
மின்மினி பூச்சிகள் சேர்ந்து
நிலவினை அடையும் தேடல் இது...

தோல்வி
உன் வெற்றிக்கான வேள்வி,
வெற்றி
உன் உழைப்பிற்கான பரிசு..
பரிசு
உன் முயற்சியின் அடையாளம்,
முயற்சி
அது போர்ப்பயிற்சி,

மாதா பிதா குரு தெய்வம்
தோல்வி வெற்றி முயற்சி பரிசு..

வாழ்க்கை
பிறப்பில் ஆரம்பித்து
இறப்பில் முடியும்
ஒரு வட்டம்..

உன் வாழ்க்கை
தோல்வியில் ஆரம்பித்தால்
சந்தோசப்படு,
இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று..
வெற்றியில் ஆரம்பித்தால்
கவனமாய் இரு
இங்கு கள்வர்கள் அதிகம்..

நீ
ஆரம்பத்தில் கள்வனை இரு
பிறகு கவனமாய் இரு...

உன் காலுக்கு செருப்பு
நீ பெரும் தோல்விகள்..
உன் தலைக்கு கிரீடம்
உன் முதல் தோல்வி...

பெருமைகொள்
தோற்றுப்போனவன் என்றல்ல,
மீண்டு வந்தவன் என்று..

என் இலக்கு
உன்னை முடுக்கிவிப்பது,
உன் இலக்கு
அதனை முடித்து வைப்பது..
இங்கே இலக்கினை
நீ நிர்ணயித்துவிடு ,
இல்லை
அது உன்னை நிராகரித்துவிடும்..

உனக்குள் கிழிக்கப்பட்ட
உன் எல்லையைத்தாண்டு,
உன் இலக்கு உன்னருகி வரும்...

உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு,
ஓடபோவது நீதான்..

வெயிலில் ஓடினால்
மலையை தேடி ஓடு,
மலையில் ஓடினால்
வெயிலைத்தேடி ஓடு..
ஆனால்
எப்பொழுதும்
உன் இலக்கைநோக்கியே ஓடு..

சிறகில்லா பறவை
பறவையாகாது,
இலக்கில்லா மனிதம்
மனிதனாகாது...
நீ மனிதனாயிரு

நீ பெரும் தோல்விகள்
வானில் பறப்பதற்கு
உனக்கு நீயே கட்டிக்கொள்ளும் சிறகுகள்..
உன் வாயிற்று பசிக்கு
நீயே விதைத்துகொள்ளும்
விதைநெல்..

தெரிந்துகொள்
உன் பசிக்கு
நீதான் உண்ணவேண்டும்,
உன் இலக்கிற்கு
நீதான் ஓடவேண்டும்..

உலகம் நாடக மேடையல்ல,
இங்கு வலிகள் உண்டு
வலிகள் மட்டுமே உண்டு..

எங்கே
என் இலக்கு முடிகிறதோ
அங்கே
உன் இலக்கு ஆரம்பம்..

இங்கு இலக்குகள் நிர்ணயிக்க படுவதில்லை
ஏற்கனவே நிர்ணயித்ததை இலக்கினை
காயடிப்பதே(முறியடிப்பதே) இலக்காக அமைகிறது..

என்னைப்போல் ஓடாதே
என்னைவிட வேகமாய் ஓடு,
உனக்கான இலக்கு
உன்னை விட வேகமாய்
ஓடி கொண்டிருகிறது..

அதோ,
உன் இலக்கு
தொட்டுவிடும் தூரம்தான்,
விடாதே துரத்து..

மீண்டும் ஒருமுறை,
என் இலக்கு
உன்னை முடுக்கிவிப்பது,
உன் இலக்கு
அதனை முடித்து வைப்பது..

இதோ என் இலக்கு
தொட்டுவிடும் தூரம்தான்,
அது
உங்கள் மனது...

தொட்டுவிட்டேன்
என்ற பெருமிதத்துடன்...

ப.சுரேஷ்..

எழுதியவர் : ப.சுரேஷ்.. (16-Aug-12, 7:47 pm)
பார்வை : 705

மேலே