தாய்மை
என் தாய்மையில் உணர்கின்றேன்
என் தாயின் மகத்துவத்தை
வார்த்தைகள் வரவில்லை
என் தாயின் மகத்துவத்தை
உணர்கின்ற போது
என் வரவிற்காக தன்
தேக நலத்தை எண்ணாமல்
என் நலம் கருதி
உன்னை வருத்தி
என்னை ஈன்றாய்
உன் உதிரம் எனக்கு உணவாகியது
உன் பாதுகாப்பில் நான்
வளர்த்தேன் நலமாக
அன்று முழுவதாக அறியவில்லை
தாயே உன் அருமை
இன்று உணரபடுகிறது
என் தாய்மையில்
தாயின் மகத்துவம்