என்னுயிரைப் பற்றி.....
![](https://eluthu.com/images/loading.gif)
தமிழ்
அது ஒரு மலர்!
கவிதையாய் கோர்க்கப்பட்டால்
மாலையாக்கலாம்!
கட்டுரையாய் பினைக்கப்பட்டால்
கதம்பமாக்கலாம்!
கதையாய் பின்னப்பட்டால்
சரமாக்கலாம்!
இல்லையெனில்
மலரென தமிழையே
இதயத்தில் சூடிக்கொள்ளலாம்!
எப்படியாயினும்
மணக்கத்தான் செய்யும்
மனம்!
தமிழெனும் (மலரின்)
நறுமணத்தால்!!