ஜப்பானின் ஹைக்கூ - வான் துளிகள் !

நீல ஏடு
மஞ்சள் மையினால் யாரோ
எழுதிவிட்டு போயிருக்கிறார்கள் - ஒரு
ஜப்பானின் ஹைக்கூ...
நிலவு !
•
கறுப்புத் தாளில்
ஒரு குட்டிக் கவிதை
சுற்றிவர சிதறல்களாய் – பல
ஹைக்கூ கவிதைகள்...
நட்சத்திரங்கள் !
•
நீல மைதானம்
ஒரு புரட்சி கவிஞன்
கோபமாய் ஒரு
கவிதை பிரசங்கம்...
சூரியன் !
•
நீல வெளி
நிலா தன் போர்வைகளைத்
துவைத்துக் காயப்
போட்டிருக்கிறாள்...
வெண்முகில் !
•
நீல வானம்
நிலாவைக் காணவில்லையென்று
சோகத்தில் போட்டுகொண்ட
கறுப்பு முக்காடு...
கார்மேகம் !
_______________
(இவை ஜப்பானின் ஹைக்கூ கவிதைகள் அல்ல...நான் எழுதிய குட்டி கவிதைகள். ஜப்பானின் ஹைக்கூ என்ற நிலாவுக்கான உவமை எனக்கு பிடித்திருந்ததால் தலைப்பில் ஜப்பானின் ஹைக்கூ என்று கூறியிருக்கின்றேன்)
*ஹைக்கூ இலக்கணங்களை மீறிய சில ஹைக்கூ கவிதைகள்.