புதைந்த புதையல்........

வாங்க வாங்க
வரவேற்க வாய்
மறந்து போச்சு..........


வந்தவங்களுக்கு
முதல் வரவேற்பா
தண்ணீர் தரும்
கைகள் முடமாச்சு..........


வந்தவங்களுக்கு
சாப்பாடு போட்ட
காலம் ஓடிபோச்சு..........


சொந்தங்களுக்கு
சாப்பாடு போடக் கூட
மனசு மறுத்துப் போச்சு........


உடைஞ்ச கண்ணாடித்துண்டு
எல்லாப் பாதங்களையும்
பதம்பார்க்கும் கோட்பாடு
தெரிஞ்சே கால்களும்
விலகிப் போச்சு........


உதவி செய்யும்
நோக்கத்தையும்
தவறுதலாக பார்க்கும்
கண்களுக்கு பார்வைகள்
மட்டமாச்சு.........


ஊர் வம்புகள் ரசிச்சு
கேட்டுக் கேட்டு
காதுகளுக்கும் பழகிப்போச்சு.......


மனிதன் மனிதனாக
வாழ்வதே மிகப்பெரிய
சாதனையாச்சு.........


மறந்த மனிதத் தன்மைகள்
பூமியோட சேர்ந்து
சுற்றிக்கிட்டே இருக்கு
அறிவுக்கு ஏனோ
எட்டாமப்போச்சு........


பாடமாகப் படிக்கிறோம்
தேர்வுக்கும் எழுதுறோம்
உணர்வுப்பூர்வமா ஏத்துக்க
முடியாமப்போச்சு.......


அறிவுரை இல்ல
இது கட்டளையும் இல்ல
வேண்டுகோள் இல்ல - இது
விண்ணப்பமும் இல்ல.......


கொஞ்சம் கொஞ்சம்
ஞாபகப்படுத்துவோம்
புதைத்து வைத்த
புதையலாய் உறங்கும்
மனிதத் தன்மைகள் !!

எழுதியவர் : (9-Sep-12, 8:41 pm)
பார்வை : 161

மேலே