அந்நிய கலாச்சார ஆதிக்கம்...
வண்டுகள் வரும்போது
பூ வாய்மலர்ந்து நிற்கும் மலரே - உன்னிடம்
தேன் மதுவுள்ளவரை மட்டுமே
வண்டுகள் வரும் போகும்...
உன்னை
தென்றல் தீண்டும்போது - நீ
முகம் திரும்பி நின்றாலும்
வனமெல்லாம் உன் மணம் வீச
வாடையாக வந்துபோவான் - உன்
முகம்வாடி நிற்கும்போதும்...
தோழா..
தென்றலாக தமிழ் இருக்க
வேற்றுமொழி வண்டுகள் எதற்கு..?
தமிழான தென்றலோடு - உன்
மலரான கவி மனதைச் சேறு
வனமான உலகமெல்லாம்
மணமான தமிழ் மரபைச் சேர்க்கும்...
மது உண்ட மயக்கத்திலே
மதி மாறி திரியும் வண்டுபோல
மேல்நாட்டு மோகத்தாலே - நம்நாட்டு
பண்பாட்டை விட்டு - அந்நியனின்
ஆடைகள்மட்டுமின்றி அவன் உண்ணும் உணவு முறைபோல
அதிவேக உணவும் உண்டு
அறிமுகமில்லா நோய்களும் வந்து
அவசரப்பிரிவு அறையில் சேர்ந்தும்
புதுப்பாங்கு என்று சொல்லி
தற்கால தோரணையாக
கற்கால உடைகளே மாற
அகக்கண் திறக்க மறந்து
அவன்பாங்கு அடிமையானோம்...
நம்
தாயகத்தின் கலாச்சாரமே
தரணியிலே சிறந்ததென்று
நூல்களிலே படித்துவிட்டு
நம்நாட்டு பண்பாட்டை
பாராட்டும் அவன்கூட
அவன்நாட்டு பண்பாட்டில்
அணுவளவும் மாறியதில்லை...
நம்நாட்டு பண்பாட்டை - வரலாற்று
ஏடுகளில்விட்ட நாம்
வெளிநாட்டு பண்பாட்டை
வரவேர்ப்பதை விட்டு விட்டு
வருங்கால மொட்டுக்களை - நம்
பாரத பண்பாட்டில் மலரச்செய்வோம்...