சொல்லாத செய்திகளெல்லாம்.......
உனக்காக நான் வாழ வேண்டும்-உன்
உறவோடு உயிர் வாழ வேண்டும் ...
கனவெல்லாம் நினைவாக வேண்டும் -என்
நினைவெல்லாம் நிஜமாக வேண்டும் ...
மெல்ல நடை போட்டு வருவாள் -என்
கன்னத்தில் பரிசொன்று தருவாள் ...
சின்ன இதழ் கொண்டு சிரிப்பாள் -என்
நெஞ்சத்தை சிலையாக்கி வடிப்பாள்....
சொல்லாத செய்திகளெல்லாம் -என்
நெஞ்சோடு நீங்காது தந்தாள்...
நீ இல்லாத நாளொன்று உண்டு -என்
ஜீவன் வாழாது அன்று...
எழுதாத எழுத்தொன்று உண்டு -என்
இறப்பு தான் கல்லறையில் அன்று ....
கனவோடு சுமந்து காத்திருக்கிறேன்...-உன்
நினைவோடு உயிரையும்.....
என் கட்டிலோரம் கட்டி வைத்திருக்கிறேன் .......!
அழகான வாழ்நாளே அது வரை காத்திரு....!!!