அந்த நாள்

தத்தி நடந்த - அந்த
பிஞ்சு பருவமும்
தப்பு தெரிய - அந்த
பிள்ளை பருவமும்
நெஞ்சின் துடிப்பாய் இந்த நாட்களில்.

ஜாதி பாராது , குலம் கேக்காது
உள்ளம் தந்து உயிராய் மதித்து
நெஞ்சத்தில் பதிந்த அந்த
பள்ளி நாட்கள் இன்னும் நிஜமாய் .

அடித்த ஆசானும் , பிடித்த ஆசானும்
எழுத்தறிவித்த கற்பித்த யாவரும்
நான் வாழும் வரை
எனது நினைவில் அந்த நாட்கள்.

வயது மாறலாம் - என்
மனம் மாறாது
வாழ்கை மாறலாம்
என் கொள்கை மாறாது .
நான் மாறலாம் - அந்த
நல்ல நாள் சிந்தை மாறாது.

எழுதியவர் : (7-Oct-12, 7:51 pm)
சேர்த்தது : செபஸ்டின்
Tanglish : antha naal
பார்வை : 148

மேலே