பணிவே சிறப்பு
கனிகள் நிறைந்த வாழைத்தார்
கனிவாய் பணிந்து கிடந்தது
வந்து முளைத்த வாழை இலைக் குருத்து
வானம் நோக்கி நிமிர்ந்து நின்றது
நாட்கள் சென்றது
கனிகள் இனித்தது
அடங்காத இலைக் குருத்து
ஆர்பரித்து விரிந்தது
அடித்த புயல்காற்றில்
கிழிந்து அழுதது.......
பணிவே சிறப்பு என்ற
பண்பை மறந்தது......
படாத பாடுபட்டு
பட்டென செத்தது....!