நேசித்ததால் உறங்குகிறேன் கல்லறையில்

முதல் முதலாய் உன்னை
ஆசையில் கை சேர்த்தேன்

யாரேனும் பார்த்து தொலைத்தால்
நம் தொடர்பு வீட்டுக்கு
தெரிய வரும் என

நெஞ்சம் படபடைத்தாலும்
உன்னை கை விட
மனம் இல்லை

எண்ணில்அடங்காது
என் இதழோடு
நீ இணைந்த தருணங்கள்

யார் சொல்லியும் கேட்கவில்லை
உன் மீது நான் கொண்ட
மோகமும் குறையவில்லை

உடல் விட்டு உயிர் கொண்டாய்
என் நிலை புரிகைலே
எல்லோரும் அழுகிறார்கள்
நான் இறந்து விட்டேன் என்று

எழுதுங்கள் என் கல்லறையில்
நான் சிகரட்டை நேசித்ததால்
இறந்தவன் என்று

எழுதியவர் : Meenakshikannan (10-Oct-12, 5:18 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 201

மேலே