கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது கே பி சுந்தராம்பாள் ஒரு பார்வை பகுதி -1
நீ
தொண்டைக்குள்
ஓர்
சங்கீத குற்றாலத்தை
சுமந்து பிறந்தவள் .....!
காவேரி தாலாட்டி
மகிழ்ந்த கொடுமுடியில்
தென்றல்
தொட்டில் கட்டி
தாலாட்டி மகிழ்ந்தது
உன் மழலை சங்கீதத்தை .....!
ஊருக்கு ஒதுக்குபுறத்தில்
வறுமை வாசம் செய்த
குடும்பத்தில்
வறுமையோடு போட்டிபோட்டு
தவழ்ந்தது
உன் இசையும் ..குரலும் ....!
குரல் வளத்தை தவிர
எந்த வளமும் இல்லாத
வறுமை குடும்பத்தில்
நீ
சங்கீதத்தை மட்டுமே
தாலாட்டி மகிழ்ந்தாய் ...!
தெருக்கள்
கோவில்கள் என
கொடுமுடியின் கரைகளில்
காவிரியின் சலசலப்போடு
குற்றால அருவியாய் கொட்டியது
உன் குரலோசை .....!
கொடிது கொடிது
இளமையில் வறுமை கொடிதென
நீ
அனுபவித்து பாடியதால் தானே
தமிழ் சொற்களும் உயிர் பெற்றன ....!
தினசரி
உன் குரலை
தடவி சென்ற இரயில்
ஓர் நாள்
உன்னையும் சுமந்து சென்று
உலகுக்கு அறிமுகப்படுத்தியது ...
குடகுமலை
காவிரி போல்குடத்துக்குள்
குமறிக்கிடக்காமல்
இரயில் ஏறி
உலகின் செவிகளை
சீராட்டி மகிழ்ந்தது உன் குரல் ...!
பாட்டும் நடிப்பும்
குற்றால அருவி போல்
கரைபுரண்டு ஓடியது
தமிழர்களின் நாடி நரம்புகளில் ....!
நாடக மேடையும்
உன்
பாட்டாலும் நடிப்பாலும்
பரவசம் பெற்றது .....!
உன் குரல்
சிறை பிடிக்காத
செவிகளும் உண்டோ...?
(மீண்டும் மலரும் )