கோலங்கள்,,,

கோலங்கள்,,,
(என் டைரியின் சில பக்கங்களிலிருந்து நான்)

அவள் என்னில்
ஒரு அங்கமாய்
இருந்தவரை
நான் அவளின்
அங்கம் முழுவதும்
குடியிருந்தேன்,,,,

மூன்று வழி
முட்டுச்சந்தில்தான்
அவளை முதல்
முறைப்பார்த்தேன்,,,,,,

நிமிர்ந்து பார்க்க
முடியாத நாணங்கள்
அவளில் இருந்தும் ,,,,
ஒரே ஒரு முறை
நிமிர்ந்தாள்
என்னை காண,,,,

என் தாமதங்கள்,,,
அதில்
ஏனோ,,அவளின்,,
எதிர்பார்ப்புகள்,,,

அவள் வாசலில்
எனக்காய் இருவிழி
கலங்கி காத்திருந்த
நேரங்களில்
கண்ணீரால்,,,அவள்
இட்ட கோலங்கள்,,,
அழிந்திருப்பதனை,,,
அறிந்தேன்,,,

அவள் கோலம்
சொல்லத்தான்
வாசலில்
கோலம் இட்டாளோ
இல்லை இதுவரை,,,
என்னுடன் பேசத்தான்
பல கோல பாஷைகள்
கற்றாளோ,,,,???

நான்கடுக்கு
மாளிகையில்
நான் சொன்ன
வார்த்தைக்காக
காத்துகிடந்தவளின்
கால்கள் தான்
வலித்ததோ
என்னவோ ,,,,

என்
தாமதத்தினால்
அவள் கொண்ட
பொய்கோபம்,,,,,அது
என்னை இழுத்து
சென்றது மறுபடியும்,,,,,
அவளிடம்,,,,

அவளால் என்னிடம்
என் முகம் பார்த்து
என் விழி பார்த்து
சொல்ல முடியாமல்
போனதோ என்னவோ,,,
தெரியவில்லை,,

வெட்கம் என்னும்
உதிரி பாஷையில்
என்னிடம் ,,,,
உதிர்த்து சென்றாள்,,,
அவள்
உதிர நினைத்த
அந்த மௌனம்
தாங்கிய காதலை,,,

அவளை
உணர்ந்தவனாய்
இருந்தும்
தாமதிக்கிறேன்,,,,,,
அவளின் அந்த
இருவிழி தாங்கிய
காதல் சுமைகளை
ஏற்றுக்கொள்ள,,,,,,
நான்,,,,

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (20-Oct-12, 11:57 am)
பார்வை : 222

மேலே