அது ஒரு கோடைக் காலம்

இரவு நேர
கிரிக்கெட்
மைதானத்தில்
வீசும்

ஒளி வெள்ளத்தை
மிஞ்சும்

கண் கூசும்
உப்பளங்களில்

அது போன்ற
ஒரு பளபளப்பு

எங்கெங்கு காணினும்
கருப்பு வெண்மையும்

கானல் நீரும்
அழுக்கு நிறைந்த
சிறு சிறு கற்கள்

கலங்கிய சிறு சிறு
ஓடைகளும்

சிறகுகள் கொண்ட
மீனவர்கள்

புறந்தள்ளி விடுகின்றனர்
இந்த கோடை காலத்தை

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (22-Oct-12, 11:15 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 142

மேலே