மெல்ல சிதறும்...
மொத்தமாக கொட்டும் அருவியை விட
சிறு கீற்றாய் வழியும்
மலை வழி நீர் மிக அழகு
அது போல நீ கண்ணீரை
மழையாக கொட்டும்போது
நான் ஆறுதல் சொல்வதை விட
உன் கரு விழிகளில் இருந்து
மெதுவாக உருண்டு உன்
கன்னமெனும் கோப்பை வழியாக
மெல்ல சிதறும் ஒரு துளி கண்ணீரை
துடைத்து உனக்கு ஆறுதல்
சொல்லி ரசிப்பதையே நான் விரும்புகிறேன்
என் செல்லமே...
இதை காதல் ரசனை என்று
மட்டும் ஒரு வரிக்குள் அடைத்து விட
முடியாது.......