ஊர்விட்டுப்போன ஜோடி
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
ஆட்டுக்கால் ரசம் எல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
நானும் நீயும் செல்லக்குருவி .
நீஎன்னைப் புரிந்து
நானுன்னைத் தெரிந்து
வாழ்க்கை வாழ்வோம்
நடுவிலென்ன மதங்கள்
நாறுகின்ற சாதிகள்
விறகாய் எரிப்போம்
நீகாட்டும் தெளிவு
நான் காட்டும் அன்பு
நமக்கேது பிரிவினை
நான் எடுப்பதும்
நீ கொடுப்பதும் இன்றுமுதல்
சோசலிசப் பொதுவினை
உயிரோடுஉயிரோடு
ஊனோடு ஊனோடு
உறவாடி கானம் பாடுவோம்
ஒயிலாகி ஒயிலாகி
வெயிலோடும் மழையோடும்
விளையாடி மோனம் தேடுவோம்
உன்பார்வை பட்டு
பொன்னாக மாறும்
பொன்னான காலம் வரும்
உப்பரிகை அம்பாரத்தில்
சிரித்து விளையாட .
சிப்பிக்குள்முத்து பிறந்து வரும்
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
ஆட்டுக்கால் ரசம் எல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
நானும் நீயும் செல்லக்குருவி .