பந்தல் வானம்

அந்திவந்த
மஞ்சள் சேலை
மாலைநேர
வான ஓலை.

வண்ணம் குழைத்த
வானக்கோப்பை
உடைந்து வழியும்
ஓவிய ஊர்வலம்.

இரவு வான
கரும்பந்தல்
பூத்த விண்மீன்மல்லிகை...
சிறு வெண்மேகம்
பூவின்புதையல்.

வானம் ஒரு
வண்ணக்கலவை.

எழுதியவர் : விமல் (9-Nov-12, 5:23 pm)
சேர்த்தது : சுவிமல்ராஜ்
Tanglish : panthal vaanam
பார்வை : 126

மேலே