அத்தனையும் பொய்யோ

அத்தனையும் பொய்யோ

ஒவ்வொருவருக்கும் ஒரு குறை வைத்த இறைவன் எங்களுக்கும் ஒரு குறை ,
பத்துமாதங்கள் சுமந்து ,
மசக்கையில் பெருத்து ,
மனசுமைகளை இறக்கி
மானசீகமாய் குழந்தை சுமக்கும்
பாக்கியம் என் மனைவிக்கும் கிடைக்கவில்லை ,
பிறந்த குழந்தையை ஆசையாய் சுமந்து
அன்பாய் வளர்த்து
நண்பனாய் பழகி
வாரிசை வளர்க்கும் பாக்கியம் எனக்கும் இல்லை !

துன்பத்தை மறக்கடிக்க தோன்றினால்
வளர்ப்புமகள் ,
ஆசையாய் அன்பாய் உலகமாய் உயிராய்
வளர்த்தோம் நானும் மனைவியும் ,
தொட்டிலில் கிடைத்தவள்
தோளுக்கு மேல் வளர்ந்தால் ,
இவளை பிறப்பில் வளர்த்த பெற்றோர்கள்
வளர்ந்ததும் ரசிக்க
வளர்த்த கிளி எங்களுடனே வளர்ந்த கிளி
கூடு மாறி பறந்து போனது
பெற்றவளை தேடி ,
ஒரு மணி நேரம் காத்தோம் ,
ஒரு நாள் காத்தோம் ,
ஒரு மாதமாய் காத்து கிடக்கிறோம்
அவள் வருவாளென்று !

நீங்கள் தான் என் உயிர் ,
நீங்களே என் உலகம் ,
உழைத்து நீங்கள் ஓயும் போது
ஊன்றுகோலாய் இருப்பேன் என்றவள் ,
தனிமையில் எங்களை துவளவிட்டு விட்டாலே ,
பாசக்கார துரோகி !

தனிமையே சூனியமாய்
உலகமே வெறுத்துப்போய்
அவளின் நினைவுகளாய் எங்களுடன் இருக்கும்
பொருட்களை பார்த்து நிமிடத்திருக்கு நிமிடம்
துடிக்கிறோம் ,
அவள் காட்டிய பாசம் ,
அவள் காட்டி ஸ்பரிசம் ,
அவள் கொடுத்து அரவணைப்பு ,
எல்லாம் பொய்யோ ,
இந்த வேஷக்கார உலகில்
பாசம் எல்லாம் பொய்யோ !

எழுதியவர் : வினாயகமுருகன் (17-Nov-12, 10:33 am)
பார்வை : 217

மேலே