விடா முயற்சி

தோல்விகள் கண்டு துவண்டதில்லை
வெற்றியை தேடி விரைகிறேன் விடாமுயற்சியோடு !

தோற்றதால்தான் வெற்றிக்கான அனுபவங்களை
கற்றுகொண்டிருக்கிறேன்
அலட்சியங்களை ஓரம்கட்டி ,
லட்சியத்தோடு பயணிக்கிறேன்
இந்த துடுப்பில்லாத வாழ்க்கை பயணத்தில்
சுழர்க்க்காற்றிலும் கூட
சூட்சமத்தை கற்றுக்கொள்கிறேன் ,
வாழக்கையில் கரை சேர்வதற்கு !

பிறரிடம் எதிர்பார்த்ததை
எனக்குள்ளே தேடி தன்னம்பிக்கையோடு
விரைகிறேன் விடாமுயற்சியோடு
எதிர்கால வெற்றிகளுக்கு
கடந்தகால தோல்விகளை உரமாக்குகிறேன் !

விதியை நினைத்து
காலத்தை விரயம் செய்யாமல் ,
வாய்ப்புகளை துரத்தி ,
இரையை திறத்தும் பூனையாய் இல்லாமல்
உயிர்க்கு பயந்து ஓடும் எளியாய் ஓடுகிறேன் !

வீழ்ந்துவிட்டோம் என சோர்ந்துபோகாமல
எழுந்து ஓடவாவது முடிகிறதே
என்கிற நம்பிக்கையில் ஓடிக்கொண்டிருக்குறேன் ,
உழைக்கின்ற நேரமே நல்லநேரம்
என்பதை புரிந்துகொண்ட
காலத்தை வீணாக்காமல்
கடமையோடு பயணிக்கிறேன் !

ஏமாற்றுபவர்களையும்
எமாற்றியவர்களையும்
அடையாளம் கண்டுகொண்டேன் ,
வாழக்கை அனுபவ பக்கங்களில்
ஒவ்வொரு பதிவையும் அழுத்தமாய் பதிந்து
ஓடிக்கொண்டிருக்கிறேன் வெற்றியை தேடி
விடாமுயற்சியோடு !

ஆதரித்தவர்களையும்
அலட்சியம் செய்தவர்களையும்
அடையாளம் காட்டிகொடுத்த சந்தர்ப்பங்களுக்கு
நன்றி சொல்லிவிட்டு மீண்டும் பயணிக்கிறேன்
வெற்றியை நோக்கி விடாமுயற்சியோடு !

எழுதியவர் : வினாயகமுருகன் (17-Nov-12, 12:06 pm)
பார்வை : 4230

மேலே