தூங்காதே தம்பி....
இரண்டுவருட படிப்பை
மூன்று மனித்தியலங்களுக்குள்
திருப்பிகொடுக்கும் முயற்ச்சியில்
தோற்றுப்போய்
துக்கங்கள் தொடர
தூங்கித் தூங்கி
தொலையும் என் சகோதரர்களுக்கு...
இந்தகல்விமுறை
நமக்காய் வரையப்படவில்லை,
புத்தக பூச்சியாய் வாழ்ந்தவன்
சாதனைகளாய்
பூச்சியங்களைத்தவிர
வேறு எதையும் பெறப்போவதுமில்லை...!!!
தாய்மொழியில் பட்டம்பெற்று
அந்நியமொழி நேர்காணலோடு
தோற்றுப்போகும் வாழ்க்கை
உனக்கான முடிவும் அல்ல...
பருவக் காதலில்மூழ்கி
அதன் வரைவிலக்கனமாய்
நீ கற்றுக்கொண்டதெல்லாம்
உனக்கான வாழ்வுமல்ல...
தூக்கத்தையும்,
காமத்தையும் துரத்திவிட்டு
உனக்கான திறமையை
தேடும் முயற்ச்சியில்
இன்றிரவு மட்டும்
தூங்கிவிடாதே...
உமக்கான வெற்றியை
என்னோடு சில நிழல்களும்
வாழ்த்தும்...!!
உமக்கான என் பிரார்த்தனை
என்றும் என்வரிகளில்
தொங்கிநிற்கும்.....!!!
வாழ்க வளமுடன்!!!!