முகம் தெரியாத உறவுகள்
விடுக்கைகளில் துவங்கிய நட்புக்கள் அவை
ஊட்டு வாசல் தாண்டி
ஊரு வேலி தாண்டி
உலகெல்லாம் உலாவருகிறது
உற்ற நண்பர்களின் நட்புக்கள் இப்புது
உறவுகளில் கொஞ்சம்
நசுங்கிப்போனதென்னவோ
உண்மைதான்....
நட்பென்பதென்ன கேட்டுக்கிடைப்பதா???
விடுக்கை அனுப்பித்தானே இங்கு உறவுகள்
முளைக்கின்றன
காளாண்கள் போல சில நாட்கள்
வெல்லாமை செய்யும் வரை சில போகங்கள்
நீடித்து நிட்பதுண்டு...
இவ்வுறவுகள் காலவறையோடே
உற்பத்தியாகின்றன....
பல நாட்கள் காத்திருந்து
விடுக்கை அனுப்பப்படுகிறது
நெடு நேரம் விழித்திருந்து
விபரங்கள் சேர்கப்படுகின்றன
தகவல்கள் பறிமாறப்படுகின்றன
தந்திரங்களும் கையாளப்படுகின்றன
திருமணத்தில் முடிந்தவையும் உண்டு
விவாகரத்தில் சிதைந்தவையும் கண்டு
உண்மை உரைகிறது ஆயினும்
உள்ளம் அவ்வழியே செல்கிறது
வீட்டினதும் நாட்டினதும் எல்லைகள்தாண்டி
பயணிக்கிறது வறையறைகளின்றி
புதுப்புது உறவுகள் தினந்தோரும்
புதுப்புது முகங்கள் மனந்தோரும்
கொஞ்சிக்குழவுவதும்
பின்பு அழுது கண்ணீர் வடிப்பதும்
அறிவுறை சொல்வதும் பின்பு
ஆறுதல் சொல்வதும்
உலகத்தின் எங்கோ ஒரு மூலையில்
ஏதும் தெரியாத ஒருவருக்கன்றோ....
சொந்தப்படங்களில் பலர்
போலிப்பெயர்களில் இன்னும் பலர்
சித்திரங்களோடு இன்னும் பலர்
முகவரியற்ற இன்னும் பலர்
சங்கமிக்கின்றன
ஒரே இடத்தில்...
நற்பணியும் செய்வதுண்டு
நார் அறுத்தும் போவதுண்டு
விசித்திர உலகமிது
தெரிந்தவருக்கு புறமுதுகும்
தெரியாதவருக்கும் புன்சிரிப்பும்
காட்டி அலைகிறது
கால்பதித்து நகர்கிறது
முகம் தெரியாத உறவுகள்....
உடன் பலகாத உயிர்கள்....
அதன் பாணியிலே
பயணிக்கின்றன