உதிரும் சிறகு - ம. ரமேஷ் ஹைக்கூ
வண்ணத்துப்பூச்சி
விளையாட்டு காட்டுகிறது
குழந்தை
கனவின் பொருள்
என்றாவது அறிந்திருக்குமா?
தலையணை
தலையணை
ஈரமாயிருக்கிறது
பழைய நினைவுகள்
பூக்கள்
தலையாட்டுகிறது
பலமாய் வீசும் காற்று
சிறகடிக்கும் பறவை
உதிரும் சிறகு
பறக்கும் வண்ணத்துப்பூச்சி