நொடிப்பொழுது...

இமைக்க மறந்த
இமைப்பொழுதில்
சவமென்றார்கள்...

மூட மறந்த
மூன்றுநொடியிலும்
சவமென்றார்கள்...

சிமிட்டிய ஒரு
சில நொடியில்
உயிருள்ளதென்கிறார்கள்...

ஆராய்ந்து பார்க்க
அஞ்சாறு நொடியில்லை
இவ்வுலகமக்களுக்கு...

காற்றில் பறக்கும்
காகிதமாய் வாழ்ந்துதான்
பயனென்ன????

எழுதியவர் : சுபா பூமணி (1-Dec-12, 6:24 pm)
பார்வை : 163

மேலே