பாசக்காரி,,,

பாசக்காரி,,,

அவன் வராத நேரங்களில் கதவுகளை
உட்புறமாய் தாழிட்டு ஏனோ
அவன் கார் வரும் சத்தம் அவளின்
காதில் விழுகிறதா என்று
விழியுரங்காமல் காத்திருக்கிறாள்,,,

நடுராத்திரி தாண்டிய அவனின் ஒவ்வொரு
வருகையிலும் அவன் பட்டினி வயிற்றிற்கு
ஏதாவது எடுத்து வைத்தே பழக்கப்பட்டுவிட்டாள்
பாசக்காரி,,,

அவன் இறந்த பிறகு என் செய்வாய்
என் செல்வமே என்று அவளிடம் வினவிய
பொழுதும் அவள் அதை பெரிதாய்
கொள்ளவில்லை,,,

குடித்து குடித்து வெந்து விட்ட
அவன் குடலுக்கு சாதமிட்டு
மோரூற்றி அவள் கண்ணீரையும்
கடுகளவு உப்பாய் சேர்த்து கலந்து
ஏனோ ருசியாய் குடுக்க நினைத்து
காத்திருப்பாள்,,

இப்பொழுதெல்லாம் அவன் வருகையை
நோக்கி எதிர்பார்த்து எதிர்பாத்து அவள் கண்களில் எதிர்ப்பார்ப்புகளே இல்லாமல் போய்விட்டது அவன் காலம் சென்று விட்டதால்,,,

இறப்பு ஒருமுறைதான் என்று அவன்
இழப்பை அவளுக்கு வலியாய் தந்து
உணர்த்தி சென்றுவிட்டான்

பழக்க தோஷம் போல,,,

இன்னமும் ஏனோ அந்நேரங்களில்
வெளியே கார் சத்தம் எழும்புகையில்
நெட்டித்தெழுகிறாள் அது அவனாக
இருக்குமோ என நினைத்து,,,

இன்றும் அதே மோரூற்றி பிசைந்து
வைத்த ஒரு கவளச்சோறும்
அறுத்து வைத்த வெங்காய
துளிகளும் அவனுக்காக காத்திருக்கிறது,,

அவள் கண்ணீர் மற்றும் எள்ளளவும்
குறையாமல் ஏனோ பெருகிக்கொண்டே
இருக்கிறது,,,,,இனியும் அவன் வரவே
போவதில்லை என அறிந்தும்,,,

அனுசரன்,,,,

எழுதியவர் : அனுசரன் (7-Dec-12, 2:33 am)
பார்வை : 456

மேலே