உள்ளங்கையில் உன் நிழல்

நம்மிருவரின் அன்பை
மொத்தமாய் வெளிக்காட்டிய
அந்த ஒருசில நிமிடங்களின்
முத்தபரிமாற்ற பரிவர்த்தனையை
வெட்ட வெளிச்சமாய்
என்னுள் படம்பிடித்து காட்டிகொண்டிருக்கிறது
குளித்துத் துவட்டிய பின்னும்
உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும்
ஓரிரு நீர்த்துளியையொத்த
உன் நினைவுகளை தேக்கிவைத்திருக்கின்ற
பாதுகாப்பு பெட்டகமாய்
என் உள்ளங்கையின் நிழற்படத்திற்குள் நீ...!

எழுதியவர் : ச.இமலாதித்தன் (27-Oct-10, 11:28 am)
சேர்த்தது : emalathithan
பார்வை : 392

மேலே