நீ குழந்தையாக பிறந்து அழுத சத்தத்தில்... நான் தகப்பனாகப் பிறந்தேன்...
அள்ளிக் கொடுத்தாலும்
ஆறாத மனம்
குழந்தை கிள்ளிக் கொடுத்ததில்
அடங்கிவிடுகிறது.......
.................................................................
நீ குழந்தையாக பிறந்து
அழுத சத்தத்தில்
நான் தகப்பனாகப்
பிறந்தேன்...
.................................................................
ஒரு குழந்தையை அடித்துவிட்டு
எப்படி முடிகிறது
இன்னொரு தெய்வம் தேடி
கோவிலுக்கு ?
...................................................................
படுக்கையில்
ஒரு மார்பில் நீ
ஒரு மார்பில் மகள்
மகன் பிறந்தபின்
உன் கோபம்
நியாயமானதுதான்....
.............................................
"தேய்.. ரவ்வி.. வாட்டா.."
என்பது...
என் மகன் சொல்லிய
முதல் கவிதை.
...............................................
என் மகளையும்
என்னையும்
பள்ளிக்கு அனுப்பிவிட்டு
நான் மட்டும்
வீட்டில் இருப்பேன்..!
...................................................
மிஸ் காயத்ரி
புத்தகத்தில் காட்டிய
கூட்டு குடும்பத்தை
பார்க்க கேட்டது குழந்தை...
அழிந்துவிட்டதன்
வரலாற்றை
நானும் புத்தகத்தில்தான்
காட்டினேன்.
..............................................................
என் குழந்தை
சாதம் பறிமாறியபோது...
தட்டில்
கொஞ்சம் சோறும்
நிரம்பி வழியும் சந்தோசமும்
இருந்தது.