இலவசங்களின் இடுகாடு

தமிழனின் வாழ்க்கை பிறப்பிலிருந்து இறப்பு வரை இலவசத்திலேயே முடிந்து போகிறது
உழைப்பை மறக்க தொடங்கி விட்டான்.
உல்லாசத்தை அனுபவிக்க பழகிவிட்டான்
உயிரை உறவை மறந்து விட்டான்
கிடைப்பதில்லை என்றால் உயிரைவும் விடுகிறான்
எதிர்த்து வாழ திராணியற்று ஏங்கியே போகிறான்
மக்களை மூடராக்கி மூலையிலே முடங்கவைக்கும் வீணான விதைகள்
இதனால் இருப்பதை சேமிப்பதுமில்லை
அதை பாதுகாப்பதுமில்லை இல்லையென்றால் இறுதி நொடிக்கு இளைப்பாறவும் கலங்குவதில்லை

குழந்தை பிறந்ததிலிருந்து இறப்பது வரை இலவசங்களாலே இறுமாந்திருக்கிறான் .
குழந்தை பிறப்பதற்கு செலவு பெற்று அதை காப்பதற்கு இலவச மருத்துவ காப்பீடு .
வளர்ந்த பிறகு பள்ளி செலவுக்கு இலவச கல்வி.இலவச புத்தகம்,இலவச புத்தகபை இலவச செருப்பு ,இலவச உணவு, இலவச உடை , இலவச போக்குவரத்து செலவு .மேல் படிப்புக்கு இலவச உதவித்தொகை இலவச மடிகணினி இலவச சைக்கிள், படித்து முடித்த பிறகு இலவச
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை அதன்பிறகு மலிவு விலையில் மாதந்திர பொருட்கள் இலவச அரிசி அதை சமைப்பதற்கு இலவச சமையல் எரிவாயு மற்றும் கிரைண்டர், மிக்சி , சாப்பிட்டு கால்மேல் கால் போட்டு படுக்க இலவச வீடு, சுகமான தூக்கத்திற்கு இலவச மின்சாரத்துடன் இலவச மின்விசிறி ,பொழுது போக்கிற்கு இலவச தொலைக்காட்சி பெட்டி .திருமணத்திற்கு இலவச தாலி 25 அல்லது 50 ஆயிரம் ரூபாய் இலவச சீர் செனத்திகள். அதிலும் இலவச திருமணம் .என்று வாழ்ந்து முதியவரானால் இலவச உதவித்தொகை. முடிந்ததடா ......................

செத்து மடிய வேண்டியது தண்டா தமிழா
இலவசத்திற்கு என்று இறுதி ஊர்வலமோ அன்று தான் தலைஎடுக்கும் தமிழ்நாடு
தமிழனுக்கு இலவசத்தை விட்டு தன்மானத்தை விதையுங்கள் .தளர்வதில்லை தமிழன்.
என்னவளம் இல்லை இந்த தமிழ்நாட்டில் .....
உழைப்பை பழக்குங்கள் உயர்த்துவோம் உலகில் தமிழ்நாட்டை...

எழுதியவர் : bhanukl (16-Dec-12, 1:03 pm)
பார்வை : 119

மேலே