வாருங்கள் கல்வியில் புதுயுகம் படைப்போம்.
ஓடி ஓடி வாழ்ந்தது-போதும்
ஊர்மறந்து வாழ்ந்தது-போதும்.
எம் உறவுகள் கல்வியை -இழந்தது-போதும்.
எம் பண்பினை மண்னோடு-மண்னாக.
சிதைந்தது -போதும்.
வாருங்கள் எம் மாணவ-சமூதாயமே.
புது யுகம் படைப்போம்.
இனியேனும் இழந்த கல்வியை
நமக்காக -மீட்போம்.
ஒன்றாய் இரண்டாய் -றூறாய்.
துயரங்கள் எங்களை-துரத்திவர
குண்டுகள் விழுந்தாள்.
கோயில்கள் போனோம்
கோயில்கள் போனோம்-கடவுளைக்கானோம்
பள்ளிக்குப் போனோம்-பாடங்கள்கற்றோம்
அன்று அறிஞ்ஞர்கள் -கூட்டங்களாய் வாழ்ந்தோம்
இன்று மர நிழலில் வாழ்கின்றோம்.
வாழ்கையில் துன்பங்களை-சுமந்த.
சிலுவைவையை சுமக்கிறோம்.
துன்ப சுமையை இறக்க.
இனி கல்வி என்னும் -ஆயுதத்தை.
வாழ்கையில் சுமப்போம்
வாருங்கள் எம்-மாணவ சமுதாயமே.
புது யுகம் படைப்போம்.
இனியேனும் இழந்த கல்வியை
நமக்காக -மீட்போம்.
கல்வியில் முன்னேற -துடிக்கும்
எம் மாணவ சமுதாயமே.
கல்வி என்னும் இதமான காற்றினை-சுவாசிக்க.
நல்லஒரு மனிதனாய் உருவாக.
கல்வி என்னும் கலங்கரை-விளக்கில்
நாம் வாழ ஒற்றுமையாய் .
புது யுகம் படைப்போம்
இனியேனும் இழந்த கல்வியை
நமக்காக -மீட்போம்.
கல்வி என்னும் -நாதத்தை.
நம் மாணவ சமுதாயத்தின்
ஆழ் மனதில் ஒலிக்கவைத்து.
கல்வி என்னும் இலட்சியப்-பாதையில்.
உயர்வடையச் செய்வோம்.
அறிவில் சிறந்த -அதிபர்கள்.
அறிவில் சிறந்த -ஆசான்கள்
சிந்தனைத் துளிகளை-செவிமடுத்து.
ஒற்றுமையாய்-அணிதிரண்டு.
கல்வி என்னும் முடிவிலப் பயணத்தில்
புதுயுகம் படைப்போம்.
இனியேனும் இழந்த கல்வியை
நமக்காக -மீட்போம்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-